BOOK RELEASE FUNCTION 2018

Loading Events

« All Events

  • This event has passed.

BOOK RELEASE FUNCTION 2018

September 15, 2018 @ 10:30 am - 12:30 pm

Book Release Function

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் ஜெய்கோ பப்ளீஷிங் ஹவுஸ் இணைந்து ஆசிரியர் ஈ.பி.திருமலை எழுதிய “இக்கரையா? அக்கரையா?” – தன்னம்பிக்கை புத்தகம் வெளியீடு விழா பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

பல்கலை துணைப்பதிவாளர் முனைவர் பி.ஜி.குருசாமிபாண்டியன் புத்தகத்தை வெளியிட்டு முதல்பிரதியை பல்கலை தலைமை நூலகம் முனைவர் டி.ஞானசேகரன் பெற்றுக்கொண்டார். புத்தக ஆசிரியர் ஈ.பி.திருமலை புத்தக விளக்க உரையில், வாழ்க்கையில், பிரச்சனைகள் பல வந்தாலும் அதனை பிரச்சனைகளாக எடுத்துக்கொள்ளாது முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டும் என்று கூறினார்.

முன்னதாக இதே புத்தகம் சென்னையிலும் பிரபல தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில், வெளியிட்ட நிகழ்ச்சியையும் ஒலி ஒளி காட்சி மூலம் விளக்கினார்.

சென்னை, ஜெய்கோ பப்ளீஷிங் ஹவுஸ் அதிகாரிகள் மகேஸ்வரன், ஜோதிக்குமார், பேராசிரியர் தவபாலன் ஆகியோர் முன்னிலை வகுத்து வாழ்த்துரை வழங்கினர்.

 

http://epthirumalai.com/book-release-function/

Kalasalingam University and Jaico Publishing House jointly organised with Author E.P.Thirumalai the Book Release Function in Tamil  இக்கரையா? அக்கரையா?  (Ikkaraiya? Akkaraiya?) at Kalasalingam University Library, Krishnankoil, Srivilliputtur on 15th September 2018, the Saturday at 10.30 Am.

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் ஜெய்கோ பப்ளீஷிங் ஹவுஸ் இணைந்து ஆசிரியர் ஈ.பி.திருமலை எழுதிய “இக்கரையா? அக்கரையா?” – தன்னம்பிக்கை புத்தகம் வெளியீடு விழா பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

Press Release

 

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் ஜெய்கோ பப்ளீஷிங் ஹவுஸ் இணைந்து ஆசிரியர் ஈ.பி.திருமலை எழுதிய “இக்கரையா? அக்கரையா?” – தன்னம்பிக்கை புத்தகம் வெளியீடு விழா பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

பல்கலை துணைப்பதிவாளர் முனைவர் பி.ஜி.குருசாமிபாண்டியன் புத்தகத்தை வெளியிட்டு முதல்பிரதியை பல்கலை தலைமை நூலகம் முனைவர் டி.ஞானசேகரன் பெற்றுக்கொண்டார். புத்தக ஆசிரியர் ஈ.பி.திருமலை புத்தக விளக்க உரையில், வாழ்க்கையில், பிரச்சனைகள் பல வந்தாலும் அதனை பிரச்சனைகளாக எடுத்துக்கொள்ளாது முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டும்.

ஓடும் நதியும், பாறை, பள்ளம், மணல்மேடு, மலை இவற்றிற்கு தகுந்தாற்போல் ஏறியும், இறங்கியும் மணலை அரித்தும், மலை வரும்போது மலையை சுற்றியும் தகுந்தாற்போல் தன்னம்பிக்கையுடன் சென்று பலருக்கும் பயன்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செல்கிறது. அதுபோல தன்னம்பிக்கை வேண்டும் என்று கூறுவதுதான் இந்தப்புத்தகத்தில் உள்ள பல கட்டுரைகள், பல சிறுகதைகள், பல வரைபடங்கள் அமைக்கப்பட்டதின் நோக்கமாகும் என்று கூறினார்.

முன்னதாக இதே புத்தகம் சென்னையிலும் பிரபல தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில், வெளியிட்ட நிகழ்ச்சியையும் ஒலி ஒளி காட்சி மூலம் விளக்கினார்.

சென்னை, ஜெய்கோ பப்ளீஷிங் ஹவுஸ் அதிகாரிகள் மகேஸ்வரன், ஜோதிக்குமார், பேராசிரியர் தவபாலன் ஆகியோர் முன்னிலை வகுத்து வாழ்த்துரை வழங்கினர்.

பொறியியல் மாணவர்களும், கலை மற்றும் அறிவியல் மாணவர்களும் திரளாக கலந்துகொண்டு புத்தக கண்காட்சியைக் கண்டும் வெளியீட்டு விழாவில் பங்குபெற்றும் பயன்பெற்றனர். ஆசிரியர் பிரசன்னா நன்றி கூறினார்.

 

http://epthirumalai.com/press-reviews/

Details

Date:
September 15, 2018
Time:
10:30 am - 12:30 pm
Event Tags:
, ,

Venue

Kalasalingam University Library
Anand Nagar, Krishnankoil
Kota, Tamilnadu 626126 India
Phone:
1800 425 7884, 04563 – 289042
Website:
www.kalasalingam.ac.in

Organizers

Kalasalingam University
Jaico Publishing House, Chennai

இந்நூல் சுயமுன்னேற்ற நூல்களின் வரிசையில் பயனுள்ள, போற்றத்தக்க ஒரு புதுவரவு. பற்றாக்குறையோடு கூடிய அன்றாட வாழ்க்கையான இக்கரை வாழ்க்கையிலிருந்து சிறந்த, அபரிமிதமான அக்கரை வாழ்க்கைக்கு பயணிக்க ஒரு சிறந்த வழிக்காட்டி.

 வாழ்க்கையில் முன்னேற விழையும் எல்லோருடைய வெற்றிக்கும் இந்நூல் ஒரு திறவுகோலாக விளங்கும் என்பது திண்ணம்.
பல்வேறு பணிகளுக்கிடையே மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான இந்நூலை அழகான, எளிய தமிழ்நடையில் இயற்றி அளித்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள். அவர் பணி மேலும் சிறக்கட்டும்!

 

Dr.R.S.Raghavan
Dr.R.S.Raghavan

ஒரு நல்ல புத்தகத்தின் அடையாளம் படிக்கத் தொடங்கியவுடன் கீழே வைக்காமல் கடைசிப் பக்கம் வரை படிக்க வைப்பதே. தங்களது “இக்கரையா? அக்கரையா?” என்ற புத்தகம் எனக்கு அந்த அனுபவத்தைத் தந்தது. இது மிகவும் அருமையான சுயமுன்னேற்ற வகை புத்தகம்.

தொழில் முறையில் ஆடிட்டராக உள்ள நீங்கள் அருமையாக ஆங்கிலத்தில் எழுத முடியுமென்றாலும், தமிழ் வாசகர்களுக்குப் புதிய சிந்தனைகளைத் தரவேண்டும் என்பதற்காகவே இந்த நூலைத் தமிழில் எழுதியிருக்கிறீர்கள். அதனால் தமிழ் வாசகர்களின் நன்றிக்குரியவராகிறீர்கள்.

ஒரு வாசகன் என்ற முறையில், உங்களுக்கு என் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Padmashri. Dr. Nalli Kuppuswami Chetti
Padmashri. Dr. Nalli Kuppuswami Chetti(Partner M/S. Nalli Chinnasami Chetty)

திரு.ஈ.பி.திருமலை தொழில் துறையில் தனக்கென ஓர் இடத்தைப்பெற்றவர். அவரது முயற்சியும் மனித பண்பாடும் அவரை வெற்றியின் உச்சத்தை அடைய உதவியது. முற்போக்கான சிந்தனை, முரண்பாடற்ற நோக்கம், எதிலும் யதார்த்தத்தையும் உண்மையையும் உணரக்கூடிய அறிவு இவைகள் இவரது அடிப்படை ஆற்றல்கள். 

அவரது 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவங்களின் தெள்ளிய சாராம்சம்தான் இவரது படைப்பு ‘இக்கரையா? அக்கரையா?’

சுவைபட எழுதியிருக்கிறார். அறிவுப்பூர்வமான புத்தகங்களின் நடுவில் இப்புத்தகம் தனித்து மிளிரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. திரு.ஈ.பி.திருமலை அவர்களது இம்முயற்சி பாராட்டத்தக்கது. அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

Shri. V.V.Sundaram
Shri. V.V.Sundaram(Cleveland Thyagaraja Festival)