About

ABOUT THE AUTHOR

Author E.P. Thirumalai started his career in a leading Financial Corporation and subsequently replicas de relojes omega en españa opted  for a Professional career as a decorated Chartered Accountant with a practice of over three decades, during which he has mentored, channelled and assisted several entrepreneurs achieve their professional goals and business ambitions, on top of doing their accounts, tax and being their finance guru. He specialises relojes de imitacion
replica watches in identifying a great idea at its infant stage and to a point when it can assume shape as a fully functional organisation in the society. Throughout his unique practice, he has guided many a deserving entrepreneurs from myriad industries, with just a blueprint and a great business model by giving wings to their vision to fly high. So identifying and connecting right people with each other has been his USP. Not to mention the hundreds of disciples trained, guided and mentored by him, who have branched out from him into different industries carrying forward his legacy.

Another inseparable aspect of his is the undying social consciousness. For significant part of his life he has been a seasoned Lion member, who spawned his very own club with over a hundred members to improve the quality of life in the district he was a part of. As someone who rose Replica Omega De Moda Con 50% De Descuento, Omega Speedmaster Replica Para La Venta En Línea up from absolute poverty when the next meal was both uncertainty and luxury, he has always found ways to give back to the society. In his stint at Lionism, he has green lit several self-sustaining projects that continue to touch thousands of lives a to this very day like adopting schools for needy children, sponsoring their education, organising and conducting medical camps, eye donation drives.

Another facet is his oratorical ability and his absolute command over both Tamil and English languages and the words of many a masters and global leaders. Now the learnings and anecdotes of this incredible journey comes distilled in the form of a book designed to evoke, inspire and look within.

ஆசிரியரைப்பற்றி….

ஆசிரியர் ஈ.பி.திருமலை அவர்கள் தொடக்கக்காலத்தில் மாபெரும் நிதி நிறுவனத்திலும், அதைத்தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக, தன்னுடைய சொந்த நிறுவனத்தில் Chartered Accountantஆகவும் தொழிலாற்றி வருபவர். நிதி ஆசானாக கணக்குகளை தணிக்கை செய்தல், வரி மற்றும் இதர நிதி ஆலோசனைகள் வழங்குதல் போன்ற சேவைகளுக்கு மேலாக தன்னிடம் அணுகுபவரின் தொழில்ரீதியான கனவுகளையும், வியாபார லட்சியங்களையும் தொலைநோக்குப்பார்வையுடன் அணுகி, கனவாக வார்ப்பதிலும், செயல்வடிவம் கொடுப்பதிலும் பெருமிதம் காண்பவர். இவர் தொழில் பயணத்தில் எண்ணற்ற தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கு, கருவிலிருந்து நிறைவேறும்வரை திட்டங்கள் தீட்டி, தொடர்ந்து செயலாற்றுவதற்கு உண்டான தன்னம்பிக்கையையும் விதைத்து, அவர்கள் லட்சியக்கனவை நோக்கி, சுதந்திரமாக பறப்பதைக்கண்டு பரவசமடைபவர்.

இவரது வழிக்காட்டுதலும், பயிற்சியும், தேர்ச்சியும் பெற்ற பலர், வாழ்க்கையில், உலகில் பல பகுதிகளில், துறைகளில், சீரும் சிறப்புமாக, நம்பிக்கை நட்சத்திரங்களாக முத்திரை பதிக்கிறார்கள்.

இவரிடமிருந்து பிரிக்கமுடியாத ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், சமுதாயத்தை பற்றிய விழிப்புணர்வு. இவர் வாழ்வில் பெரும்பகுதியை ஒரு அர்த்தமுள்ள, ஊக்கம் மிகுந்த அரிமா அங்கத்தினராக இருந்துக்கொண்டு, சமுதாய நலன் கருதி சென்னையில் இவர் நிறுவிய அரிமா சங்கம், நூற்றுக்கும் மேலான சாசன உறுப்பினர்களைக்கொண்டு வரலாறு படைத்தது, வெள்ளிவிழா கண்டது.

இவர் இளமையில் ஒருவேளை உணவு கிடைப்பதையே விருந்தாக நினைத்த நிலைமையிலிருந்து, இன்று சமுதாயத்திற்கு நிரந்தரமாக, நிறைய கொடுக்கும் நிலையை உருவாக்கிக்கொண்டும், உதவிக்கொண்டும் வருகிறார்.

இவர் அரிமா இயக்கத்தில் ஏற்றுக்கொண்ட பணிகளில் பல பசுமை நிறைந்த, தொடர்ந்து பயனளிக்கக்கூடிய பல உன்னத திட்டங்களை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையிலே வடிவமைத்து, அன்று முதல் இன்று வரை அளித்துக்கொண்டு வருகிறார். மற்ற அங்கத்தினர்களைக்கொண்டு ஒரு குழு அமைத்து, தலைமை ஏற்று, தேவையறிந்து உதவி வேண்டுவோர் பள்ளிகளை மட்டும் தத்தெடுப்பதும், அத்தகைய குழந்தைகளின் பள்ளி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எல்லாவகையிலும் பள்ளியின் ஒத்துழைப்புடன் துணை நிற்பதும், சமுதாய நலன் கருதி இலவச மருத்துவ முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள், இரத்த தானம் மற்றும் கண் தானம் விழிப்புணர்ச்சி முகாம்கள் அமைப்பது போன்ற சில திட்டங்கள் இவற்றில் அடங்கும்.

மற்றொரு சிறப்பம்சம் இவரது வளமான கற்பனையும், சொல்லாற்றலோடு கலந்த செயலாற்றலும், தமிழும் ஆங்கிலமும் கலந்து கையாளுகின்ற பாங்கு. இவருடைய வாழ்க்கையில் சந்தித்த சுவையான அனுபவங்களையும், சம்பவங்களையும் ஒன்று திரட்டி, மற்றவர்கள் பயன்பெற, முழு திறமையையும் வெளிக்கொணர   வடிவமைக்கப்பட்டதே இந்த புத்தகம்.

Evolve Passion Triumph’ – Be and Make!

To live, love, listen, learn and lead a balanced life filled with abundance of joy and happiness in all walks of life to create difference in others life while creating difference in our own life. 


The oculus rift and other similar products are making high quality virtual reality affordable and accessible for students in the classroom and at home essay writing service.

இந்நூல் சுயமுன்னேற்ற நூல்களின் வரிசையில் பயனுள்ள, போற்றத்தக்க ஒரு புதுவரவு. பற்றாக்குறையோடு கூடிய அன்றாட வாழ்க்கையான இக்கரை வாழ்க்கையிலிருந்து சிறந்த, அபரிமிதமான அக்கரை வாழ்க்கைக்கு பயணிக்க ஒரு சிறந்த வழிக்காட்டி.

 வாழ்க்கையில் முன்னேற விழையும் எல்லோருடைய வெற்றிக்கும் இந்நூல் ஒரு திறவுகோலாக விளங்கும் என்பது திண்ணம்.
பல்வேறு பணிகளுக்கிடையே மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான இந்நூலை அழகான, எளிய தமிழ்நடையில் இயற்றி அளித்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள். அவர் பணி மேலும் சிறக்கட்டும்!

 

Dr.R.S.Raghavan
Dr.R.S.Raghavan

ஒரு நல்ல புத்தகத்தின் அடையாளம் படிக்கத் தொடங்கியவுடன் கீழே வைக்காமல் கடைசிப் பக்கம் வரை படிக்க வைப்பதே. தங்களது “இக்கரையா? அக்கரையா?” என்ற புத்தகம் எனக்கு அந்த அனுபவத்தைத் தந்தது. இது மிகவும் அருமையான சுயமுன்னேற்ற வகை புத்தகம்.

தொழில் முறையில் ஆடிட்டராக உள்ள நீங்கள் அருமையாக ஆங்கிலத்தில் எழுத முடியுமென்றாலும், தமிழ் வாசகர்களுக்குப் புதிய சிந்தனைகளைத் தரவேண்டும் என்பதற்காகவே இந்த நூலைத் தமிழில் எழுதியிருக்கிறீர்கள். அதனால் தமிழ் வாசகர்களின் நன்றிக்குரியவராகிறீர்கள்.

ஒரு வாசகன் என்ற முறையில், உங்களுக்கு என் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Padmashri. Dr. Nalli Kuppuswami Chetti
Padmashri. Dr. Nalli Kuppuswami Chetti(Partner M/S. Nalli Chinnasami Chetty)

திரு.ஈ.பி.திருமலை தொழில் துறையில் தனக்கென ஓர் இடத்தைப்பெற்றவர். அவரது முயற்சியும் மனித பண்பாடும் அவரை வெற்றியின் உச்சத்தை அடைய உதவியது. முற்போக்கான சிந்தனை, முரண்பாடற்ற நோக்கம், எதிலும் யதார்த்தத்தையும் உண்மையையும் உணரக்கூடிய அறிவு இவைகள் இவரது அடிப்படை ஆற்றல்கள். 

அவரது 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவங்களின் தெள்ளிய சாராம்சம்தான் இவரது படைப்பு ‘இக்கரையா? அக்கரையா?’

சுவைபட எழுதியிருக்கிறார். அறிவுப்பூர்வமான புத்தகங்களின் நடுவில் இப்புத்தகம் தனித்து மிளிரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. திரு.ஈ.பி.திருமலை அவர்களது இம்முயற்சி பாராட்டத்தக்கது. அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

Shri. V.V.Sundaram
Shri. V.V.Sundaram(Cleveland Thyagaraja Festival)