Author page: admin-se

இந்நூல் சுயமுன்னேற்ற நூல்களின் வரிசையில் பயனுள்ள, போற்றத்தக்க ஒரு புதுவரவு. பற்றாக்குறையோடு கூடிய அன்றாட வாழ்க்கையான இக்கரை வாழ்க்கையிலிருந்து சிறந்த, அபரிமிதமான அக்கரை வாழ்க்கைக்கு பயணிக்க ஒரு சிறந்த வழிக்காட்டி.

 வாழ்க்கையில் முன்னேற விழையும் எல்லோருடைய வெற்றிக்கும் இந்நூல் ஒரு திறவுகோலாக விளங்கும் என்பது திண்ணம்.
பல்வேறு பணிகளுக்கிடையே மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான இந்நூலை அழகான, எளிய தமிழ்நடையில் இயற்றி அளித்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள். அவர் பணி மேலும் சிறக்கட்டும்!

 

Dr.R.S.Raghavan
Dr.R.S.Raghavan

ஒரு நல்ல புத்தகத்தின் அடையாளம் படிக்கத் தொடங்கியவுடன் கீழே வைக்காமல் கடைசிப் பக்கம் வரை படிக்க வைப்பதே. தங்களது “இக்கரையா? அக்கரையா?” என்ற புத்தகம் எனக்கு அந்த அனுபவத்தைத் தந்தது. இது மிகவும் அருமையான சுயமுன்னேற்ற வகை புத்தகம்.

தொழில் முறையில் ஆடிட்டராக உள்ள நீங்கள் அருமையாக ஆங்கிலத்தில் எழுத முடியுமென்றாலும், தமிழ் வாசகர்களுக்குப் புதிய சிந்தனைகளைத் தரவேண்டும் என்பதற்காகவே இந்த நூலைத் தமிழில் எழுதியிருக்கிறீர்கள். அதனால் தமிழ் வாசகர்களின் நன்றிக்குரியவராகிறீர்கள்.

ஒரு வாசகன் என்ற முறையில், உங்களுக்கு என் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Padmashri. Dr. Nalli Kuppuswami Chetti
Padmashri. Dr. Nalli Kuppuswami Chetti(Partner M/S. Nalli Chinnasami Chetty)

திரு.ஈ.பி.திருமலை தொழில் துறையில் தனக்கென ஓர் இடத்தைப்பெற்றவர். அவரது முயற்சியும் மனித பண்பாடும் அவரை வெற்றியின் உச்சத்தை அடைய உதவியது. முற்போக்கான சிந்தனை, முரண்பாடற்ற நோக்கம், எதிலும் யதார்த்தத்தையும் உண்மையையும் உணரக்கூடிய அறிவு இவைகள் இவரது அடிப்படை ஆற்றல்கள். 

அவரது 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவங்களின் தெள்ளிய சாராம்சம்தான் இவரது படைப்பு ‘இக்கரையா? அக்கரையா?’

சுவைபட எழுதியிருக்கிறார். அறிவுப்பூர்வமான புத்தகங்களின் நடுவில் இப்புத்தகம் தனித்து மிளிரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. திரு.ஈ.பி.திருமலை அவர்களது இம்முயற்சி பாராட்டத்தக்கது. அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

Shri. V.V.Sundaram
Shri. V.V.Sundaram(Cleveland Thyagaraja Festival)