திருவின் மொழி -1
சூரியனை விட்டு விலக விலக
நிழல் வளரும்!
நம்பிக்கையிலிருந்து விலக விலக
பயம் படரும்!!
திருவின் மொழி -2
நாக்கு ஒரு தலைபட்சமான காவல் அதிகாரி!
உள்ளே அனுப்பும் உணவை
நன்கு சோதித்து அனுப்பும் நாக்கு
வெளியே விடும் வார்த்தைகளை மட்டும்
சோதிக்காமல் விடுவது ஏன் ???